மதுரையில் ஜன.30 முதல் பிப்.11 வரை தெப்பத் திருவிழா!
மதுரையில் தெப்பத் திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று (ஜன.20) நடந்தது. இதைத்தொடர்ந்து விழாவுக்கான பணிகள் தொடங்கியது.

மதுரை: மதுரையில் தெப்பத் திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று (ஜன.20) நடந்தது. இதைத்தொடர்ந்து விழாவுக்கான பணிகள் தொடங்கியது.
மதுரையில் தைப்பூசத் தெப்பத் திருவிழா ஜன.30-ம் தேதி தொடங்கி பிப்.11 வரையிலும் நடக்கிறது. இதையொட்டி, மீனாட்சி - சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன், காலை , மாலையில் கோயிலை சுற்றிலும் நான்கு சித்திரை வீதிகளிலும் புறப்பாடாகி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பா். விழாவின் முக்கிய நிகழ்வாக பிப். 5, மற்றும் 6ம் தேதிகளில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 7-ம் தேதி விழாவின் 8-ம் திருநாள் மச்சகந்தியார் திருமணக் காட்சியும், 8-ம் தேதி விழாவின் 9-ம் நாள் நிகழ்வாக இரவு சப்தாவரணமும், 9-ம் தேதியன்று 10-ம் திருநாள் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்வும், 10-ம் தேதியன்று 11-ம் திருநாள் கதிரறுப்பு நிகழ்வும், 11-ம் தேதி 12-ஆம் திருநாளாக தெப்ப உற்சவமும் விமர்சையாக நடைபெறவுள்ளது.
What's Your Reaction?