நியூஸிலாந்தை வீழ்த்திய நைஜீரியா - யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை

நடப்பு யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான குரூப் சுற்று ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 2 ரன்களில் வீழ்த்தியுள்ளது நைஜீரியா கிரிக்கெட் அணி.

Jan 20, 2025 - 21:00
 0  3
நியூஸிலாந்தை வீழ்த்திய நைஜீரியா - யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை

சென்னை: நடப்பு யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான குரூப் சுற்று ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 2 ரன்களில் வீழ்த்தியுள்ளது நைஜீரியா கிரிக்கெட் அணி. முதல் முறையாக இந்தத் தொடரில் விளையாடும் அந்த அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்தியா பங்கேற்றுள்ளது. மொத்தம் 16 அணிகள் இதில் விளையாடுகின்றன. 41 போட்டிகள். 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிந்து முதல் சுற்றில் விளையாடுகின்றன. தொடர்ந்து சூப்பர் 6 சுற்று நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்றில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து விளையாடும். பின்னர் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow