சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்; பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

தைப்​பூசத் திரு​விழாவையொட்டி சென்னை வடபழனி, கந்தகோட்​டம், அயப்​பாக்கம் உள்ளிட்ட முருகன் கோயில்​களில் ஏராளமான பக்தர்கள் பால்​குடம், காவடி எடுத்​தும், அலகு குத்​தி​யும் நேர்த்திக்​கடன் செலுத்​தினர்.

Feb 12, 2025 - 09:45
 0  2
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்; பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

சென்னை: தைப்​பூசத் திரு​விழாவையொட்டி சென்னை வடபழனி, கந்தகோட்​டம், அயப்​பாக்கம் உள்ளிட்ட முருகன் கோயில்​களில் ஏராளமான பக்தர்கள் பால்​குடம், காவடி எடுத்​தும், அலகு குத்​தி​யும் நேர்த்திக்​கடன் செலுத்​தினர். முருகப் பெரு​மானுக்கு உகந்த நாளான தைப்​பூசத் திரு​விழா நேற்று கொண்​டாடப்​பட்​டது.

இதையொட்டி அனைத்து முருகன் கோயில்​களி​லும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வடபழனி கோயி​லில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்​கப்​பட்டு, திருப்​பள்ளி யெழுச்சி நடைபெற்​றது. தொடர்ந்து பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக்​கடன் செலுத்​தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகப் பெரு​மானுக்கு அபிஷேகம் நடைபெற்​றது. பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்​தும், அலகு குத்​தி​யும் தங்களது நேர்த்திக்​கடனை நிறைவேற்றினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow