மதுரை சித்திரைத் திருவிழா 2025 - ஏற்பாடுகள் எப்படி?

மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் உலா வரும் இடங்களையும், அம்மன், சுவாமி உலா வரும் இடங்களையும் எளிதில் கண்டறிய, ஜிபிஎஸ் செயலியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Apr 21, 2025 - 17:15
 0  12
மதுரை சித்திரைத் திருவிழா 2025 - ஏற்பாடுகள் எப்படி?

மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் உலா வரும் இடங்களையும், அம்மன், சுவாமி உலா வரும் இடங்களையும் எளிதில் கண்டறிய, ஜிபிஎஸ் செயலியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா வரும் 29-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நடந்த அனைத்து நாட்களிலும் 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாகவும், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 30 லட்சமாக உயரும் என மாநகராட்சி கணித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நெரிசலால் தொடரும் பக்தர்கள் உயிரிழப்புகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow