ஆனி கிருத்திகை விழாவை ஒட்டி திருத்தணி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஆனி கிருத்திகையை ஒட்டி நேற்று திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Jun 23, 2025 - 10:05
 0  2
ஆனி கிருத்திகை விழாவை ஒட்டி திருத்தணி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருத்தணி: ஆனி கிருத்திகையை ஒட்டி நேற்று திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து, முருகனை வணங்கி செல்கின்றனர்.

இதில், கிருத்திகை நாட்கள், வார விடுமுறை நாளான ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், கிருத்திகை மற்றும் வார விடுமுறை நாளான நேற்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலை முதலே அதிகளவிலான பக்தர்கள் கோயிலில் குவிய தொடங்கினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow