திருப்பதி ஏழுமலையானை மே மாதம் தரிசிக்க டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

திருப்பதி ஏழுமலையானை வரும் மே மாதம் தரிசனம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவுக்கான தேதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Feb 19, 2025 - 06:15
 0  4
திருப்பதி ஏழுமலையானை மே மாதம் தரிசிக்க டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் மே மாதம் தரிசனம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவுக்கான தேதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதன்படி பிப். 18-ம் தேதி காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை சுப்ரபாதம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டோர் 22-ம் தேதி நண்பகல் 12 மணிக்குள் அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட் பெறலாம். மே மாதத்தில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் வெளியாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow