போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் இன்று இரங்கல் தெரிவிக்கிறது. கத்தோலிக்க திருச்சபையைத் தாண்டி, அவர் தனது பணிவு மற்றும் ஏழைகள் மீதான தூய அன்பின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தினார்.
What's Your Reaction?