வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாகும் சூசி வைல்ஸ்: யார் இவர்?
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் வரும் ஜனவரியில் ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளார். இந்நிலையில், வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை அவர் நியமித்துள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் வரும் ஜனவரியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ளார். இந்நிலையில், வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை அவர் நியமித்துள்ளார். இது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பரப்புரை சார்ந்த வியூகம் அமைக்கும் பணியை சூசி வைல்ஸ் நிர்வகித்தார். இது அனைத்தையும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் அவர் செய்திருந்தார். புளோரிடாவில் ட்ரம்ப் வெற்றி உரையாற்றிய போது சூசி வைல்ஸை பேச அழைத்தார். அப்போது கூட அவர் தயக்கம் காட்டினார்.
What's Your Reaction?