அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி. ஊடகத்துக்கு கனடாவில் தடை: இந்தியா கண்டனம்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான நேர்காணலை ஒளிபரப்பிய ‘ஆஸ்திரேலியா டுடே’ ஊடகத்துக்கு கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Nov 11, 2024 - 15:45
 0  4
அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி. ஊடகத்துக்கு கனடாவில் தடை: இந்தியா கண்டனம்

சென்னை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான நேர்காணலை ஒளிபரப்பிய ‘ஆஸ்திரேலியா டுடே’ ஊடகத்துக்கு கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் தங்களது செயல்பாடு தொடர்ந்து இருக்கும் என ஆஸ்திரேலியா டுடே தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியா டுடே ஊடக நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் ஜிதார்த் ஜெய் பரத்வாஜ் கூறுகையில், “மக்களிடம் சொல்ல வேண்டிய செய்திகளை சொல்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எத்தனை தடை வந்தாலும் நாங்கள் எங்களது நிலைப்பாட்டில் நிற்போம். பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் எங்களுக்கு இந்நேரத்தில் ஆதரவு கிடைத்துள்ளது. தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன் நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow