இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் தீவிரம்: போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான்!
இன்று (திங்கள்கிழமை) அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. இஸ்ரேலின் வடக்கு மற்றும் மையப் பகுதியில் ஏவுகணைகள் தாக்கியதில் 67 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல் அவிவ்: இன்று (திங்கள்கிழமை) அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. இஸ்ரேலின் வடக்கு மற்றும் மையப் பகுதியில் ஏவுகணைகள் தாக்கியதில் 67 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் இஸ்ரேலை கடுமையாக தாக்கி வருகிறது. இன்று (திங்கள்கிழமை) அதிகாலையும் ஈரான் பல ஏவுகணைகளை இஸ்ரேல் நகரங்கள் மீது வீசியது. ஈரானிய ஏவுகணைகளைத் தடுத்த இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்து வந்த சக்திவாய்ந்த வெடிப்பு சத்தங்கள், இன்று அதிகாலையில் டெல் அவிவை உலுக்கியது, இதனால் அந்த நகரத்தின் மீது கரும்புகை வானத்தில் எழுந்தன.
What's Your Reaction?