ஆம்ஸ்டர்டமில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்: மீட்புக் குழுவை அனுப்ப நெதன்யாகு உத்தரவு

ஆம்ஸ்டர்டமில் இஸ்ரேலியர்களைக் குறிவைத்து தாக்குதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு இரண்டு மீட்பு விமானங்களை அனுப்பி வைக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Nov 11, 2024 - 15:45
 0  4
ஆம்ஸ்டர்டமில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்: மீட்புக் குழுவை அனுப்ப நெதன்யாகு உத்தரவு

ஆம்ஸ்டர்டம்: ஆம்ஸ்டர்டமில் இஸ்ரேலியர்களைக் குறிவைத்து தாக்குதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு இரண்டு மீட்பு விமானங்களை அனுப்பி வைக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்டர்டமில் கால்பந்து போட்டியில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தாக செய்திகள் வெளியான நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் டச்சு நகரில் உள்ள இஸ்ரேலியர்கள் வெளியே வராமல் ஹோட்டல் அறைக்குள்ளேயே இருக்கும்படி வலியுறுத்தியுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தனது இரண்டாவது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow