‘உலக வல்லரசுகளின் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியாவுக்கு தகுதி உள்ளது’ - புதின்

மற்ற எந்த நாட்டையும் விட இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால், உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம்பெற இந்தியா தகுதிவாய்ந்தது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

Nov 11, 2024 - 15:45
 0  3
‘உலக வல்லரசுகளின் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியாவுக்கு தகுதி உள்ளது’ - புதின்

மாஸ்கோ: மற்ற எந்த நாட்டையும் விட இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால், உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம்பெற இந்தியா தகுதிவாய்ந்தது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் வியாழன் அன்று (நவ.7) நடைபெற்ற வால்டாய் டிஸ்கஷன் கிளப்பில் உரையாற்றிய புதின், "இந்தியா சந்தேகத்துக்கு இடமின்றி வல்லரசு நாடுகளின் (global superpowers) பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இந்தியாவின் 150 கோடி மக்கள், உலகின் மற்ற எந்த பொருளாதாரத்தைவிட வேகமாக இருக்கும் வளர்ச்சி, பண்டைய கலாச்சாரம், வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் ஆகியவை காரணமாக உலக வல்லரசுகளின் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியா தகுதியானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow