வேகமான வளர்ச்சி, வளமான எதிர்காலம் கொண்ட இந்தியாவுக்கு வல்லரசு அங்கீகாரம்: ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தல்
இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும். உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் அந்த நாட்டை இணைக்க வேண்டும். இதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ: இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும். உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் அந்த நாட்டை இணைக்க வேண்டும். இதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 2004-ம் ஆண்டு வால்டாய் விவாத மன்றம் தொடங்கப்பட்டது. இந்த மன்றத்தின் கூட்டம் ரஷ்யாவின் சோச்சி நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மேற்கத்திய நாடுகளையோ, ரஷ்ய கூட்டணியில் இல்லாதவர்களையோ எதிரியாக ரஷ்யா கருதவில்லை. எங்கள் கருத்துகளை எந்த நாட்டின் மீதும் திணிக்கவும் முயற்சி செய்யவில்லை. ரஷ்யா சுதந்திரமாக செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகள், உத்தரவுகளால் ரஷ்யாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உலகத்துக்கு ரஷ்யாவின் பங்களிப்பு அவசியம்.
What's Your Reaction?