இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அறுதிப் பெரும்பான்மையை நோக்கி ஆளும் என்பிபி கூட்டணி
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி கட்சி அறுதிப் பெரும்பான்மையை நோக்கி முன்னேறி வருகிறது.

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி கட்சி அறுதிப் பெரும்பான்மையை நோக்கி முன்னேறி வருகிறது. உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 62%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், கடந்த 75 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்துவரும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணித்தனர். தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி பதவியேற்றார். அவரது என்பிபி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனால், தேர்தல் நடத்தி பெரும்பான்மை பெறும் நோக்கில், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசாநாயக்க உத்தரவிட்டார்.
What's Your Reaction?