உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: அர்ஜெண்டினாவை வீழ்த்தியது பராகுவே

2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தென் அமெரிக்க தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் நடப்பு உலகச் சாம்பியன் அர்ஜெண்டினா மற்றும் பராகுவே அணிகள் விளையாடின.

Nov 15, 2024 - 11:15
 0  4
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: அர்ஜெண்டினாவை வீழ்த்தியது பராகுவே

அசுன்சியோன்: 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தென் அமெரிக்க தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் நடப்பு உலகச் சாம்பியன் அர்ஜெண்டினா மற்றும் பராகுவே அணிகள் விளையாடின.

பராகுவே நாட்டின் தலைநகரான அசுன்சியோனில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் மார்டினஸ் கோல் பதிவு செய்தார். இருப்பினும் அடுத்த எட்டு நிமிடங்களில் அதற்கான பதில் கோலை பதிவு செய்தது பராகுவே. சொந்த நாட்டு மக்களின் ஆதரவு பராகுவே அணிக்கு அமோகமாக இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow