‘நடுவரின் தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ - சிக்ஸ் மறுக்கப்பட்டது குறித்து ப்ரீத்தி ஜிந்தா

நடப்பு ஐபிஎல் சீசனின் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

May 25, 2025 - 13:10
 0  3
‘நடுவரின் தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ - சிக்ஸ் மறுக்கப்பட்டது குறித்து ப்ரீத்தி ஜிந்தா

ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி பேட் செய்தபோது டிவி நடுவர் சிக்ஸர் கொடுக்க மறுத்தது குறித்து தனது கருத்தை பஞ்சாப் அணியின் உரிமையாளரும் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ள அவர், “ஐபிஎல் மாதிரியான கிரிக்கெட் தொடரில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் நடுவர்களின் வசம் இருந்தும், இது மாதிரியான தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது நடக்கக் கூடாது. ஆட்டத்துக்கு பிறகு கருண் நாயரிடம் பேசினேன். அது சிக்ஸர் தான் என அவர் உறுதியாக தெரிவித்தார்” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow