அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் ஜனநாயக கட்சி வேட்​பாள​ரும், இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ஜோரான் மம்​தானி வெற்றி பெற்​றார். அமெரிக்​கா​வின் மிக முக்​கிய​மான நகரங்​களில் நியூ​யார்க் நகர​மும் ஒன்​று.

Nov 6, 2025 - 09:10
 0  3
அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி

நியூயார்க்: அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் ஜனநாயக கட்சி வேட்​பாள​ரும், இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ஜோரான் மம்​தானி வெற்றி பெற்​றார். அமெரிக்​கா​வின் மிக முக்​கிய​மான நகரங்​களில் நியூ​யார்க் நகர​மும் ஒன்​று. இங்கு நடை​பெற்ற மேயர் தேர்​தலில் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்​தானி போட்​டி​யிட்​டார்.

இவரது தாய் மீரா நாயர் இந்​தி​யா​வைச் சேர்ந்த சினிமா தயாரிப்​பாளர். தந்தை மகமூத் மம்​தானி உகாண்​டாவைச் சேர்ந்​தவர். ஜோரான் மம்​தானிக்கு 7 வயது இருக்​கும்​போதே அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் குடியேறி​விட்​டார். படிப்பை முடித்​ததும் அரசி​யலில் இறங்​கி​னார். கடந்த 2020-ம் ஆண்டு இவர் முதல் முறை​யாக நியூ​யார்க் சட்​டப்​பேர​வைக்கு தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow