‘மகாராஜா’ திரைப்படத்தை கொண்டாடும் சீனர்கள்!
சீனத் தேசியத் திரைப்பட விழாவில் நவம்பர் 15, அன்று தமிழ்திரைப்படமான மகாராஜா திரையிடப்பட்டதைச் சீனத் தேசிய செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி நிறுவனம் அறிவித்தது.

சீனத் தேசியத் திரைப்பட விழாவில் நவம்பர் 15, அன்று தமிழ்த் திரைப்படமான மகாராஜா திரையிடப்பட்டதைச் சீனத் தேசிய செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி நிறுவனம் அறிவித்தது. நவம்பர் 29ஆம் நாள் முதல் இப்படம் சீனாவில் நாடளவில் திரையிடப்பட்டது. இது போன்றே 2023 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ்த் திரைப்படமான வேலைக்காரன் படம் சீனாவில் செய்யப்பட்டு நாடளவில் திரையிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் தமிழ் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.
கொண்டாடப்படும் மகாராஜா: சீனாவில் மகாராஜா திரையிடப்பட்ட 11 நாள்களில் 58.2 கோடி ரூபாயை இதுவரை வசூலித்துள்ளது. சனிக்கிழமையன்று எனது பல்கலைக்கழகத்துக்குப் அருகேவுள்ள 3 தியேட்டர்களிலும் இப்படத்திற்கான எல்லா நுழைவுச்சீட்டுகளும் விற்பனையாகி இருந்தன. இப்படம் இணையதளங்களில் சீன மக்களால் கொண்டாடப்படுகிறது. “இந்த ஆண்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்” என்று சீன ஊடகங்கள் மகாராஜா படத்தை பாராட்டியுள்ளனர்.
டூபன் என்கிற சீனாவின் மிகப்பெரிய திரைப்பட மதிப்பீட்டு இணையத்தளத்தில், இப்படத்தினை 1.6 லட்சம்வரை பேர் மதிப்பிட்டு 8.7 மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.இப்படத்தில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உறவுகளையும், படத்தில் மறைந்திருக்கும் தனித்துவமான கதை நுட்பங்களையும் பல நெட்டிசன்கள் கண்டுபிடித்து இணையத்தில் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.
What's Your Reaction?