பராமரிப்பின்றி பாழாகும் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம்!
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்ட சைட் மியூசியம் பராமரிப்பின்றி பாழ டைந்து வருகிறது. மழைநீர் தேங்கி முதுமக்கள் தாழிகள், தொல் பொருட்கள் சேதமடைந்து வருகின்றன

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்ட சைட் மியூசியம் பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. மழைநீர் தேங்கி முதுமக்கள் தாழிகள், தொல்பொருட்கள் சேதமடைந்து வருகின்றன. இதனை பராமரிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். கடந்த 2018-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் 5 இடங்களில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதில் ஆதிச்சநல்லூரும் ஒன்றாகும். மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டலம் சார்பில் அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கின.
What's Your Reaction?