படவேடு ரேணுகாம்பாள் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகேயுள்ள படைவீடு (படவேடு) என்ற கிராமத்தில் ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது.

Aug 1, 2025 - 13:40
 0  3
படவேடு ரேணுகாம்பாள் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகேயுள்ள படைவீடு (படவேடு) என்ற கிராமத்தில் ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. கமண்டல நதியின் கரையோரம் அமைந்துள்ள இந்த கோயிலில் ஆடி மாதம் 7 வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஆடி பெருவிழா மிகவும் விசேஷமாகும். சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமான தலமாக இருக்கிறது. இங்கு அம்மன் சிரசு சுயம்புவாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளாசி வழங் குகிறார்.

அம்மன் சந்நிதிகளில் குங்குமம் பிரசாதமாக தரப்படுவது வழக்கம். ஆனால், படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோயில் சுற்றுச்சுவர்களின் மீது சிங்கத்திற்கு பதிலாக பசுவின் சிலைகளே உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow