நூறு கண் ராட்சசன்! | கிரேக்கக் கதை
கிரேக்க மாவீரர். தொலைவில் தெரிந்த ஒரு தீவில் ஓர் அரண்மனை காணப்பட்டது. அந்த அரண்மனையிலிருந்து அழுகுரலைக் கேட்கவே, அந்த மாளிகையை நோக்கிக் கப்பலைச் செலுத்தினார்கள். “இப்படி விந்தையான ஒரு மாளிகையை நான் கண்டதில்லை.

கப்பல் போய்க்கொண்டிருந்தது. அதற்குத் தலைமை வகித்துச் செலுத்தியவர் ஜேஸன். கிரேக்க மாவீரர். தொலைவில் தெரிந்த ஒரு தீவில் ஓர் அரண்மனை காணப்பட்டது. அந்த அரண்மனையிலிருந்து அழுகுரலைக் கேட்கவே, அந்த மாளிகையை நோக்கிக் கப்பலைச் செலுத்தினார்கள். “இப்படி விந்தையான ஒரு மாளிகையை நான் கண்டதில்லை. இதில் வசிப்பவர் யாராக இருக்கும் திபஸ்?” என்று ஜேஸன் கேட்டார்.
“இதைக் காணும் ஆவல் பெருகுகிறது” என்றார் திபஸ். “சாகசத்தையும் செல்வத்தையும் தேடியே நாம் கிளம்பி இருக்கிறோம். ஆகவே, அந்த மாளிகையைப் பற்றித் தெரிந்துகொள்வோம்” என்றார் ஜேஸன். இதற்குள் கப்பல், தீவின் கரையில் ஒதுங்கியது. “வீரர்களுடன் நீ கப்பலிலேயே இரு திபஸ்.
What's Your Reaction?