அஞ்சாத மன உறுதி, அசராத திறன், அற்புதமான டெக்னிக் - சிஎஸ்கே ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஆயுஷ் மாத்ரே..!

அஞ்​சாத மன உறு​தி, அசராத திறன், அற்​புத​மான பேட்​டிங் தொழில்நுட்பத்தால் சென்னை ரசிகர்​களை முதல் ஆட்​டத்​திலேயே கவர்ந்து இழுத்​துள்​ளார் சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி​யின் இளம் வீரர் ஆயுஷ் மாத்​ரே.

Apr 23, 2025 - 12:00
 0  5
அஞ்சாத மன உறுதி, அசராத திறன், அற்புதமான டெக்னிக் - சிஎஸ்கே ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஆயுஷ் மாத்ரே..!

அஞ்​சாத மன உறு​தி, அசராத திறன், அற்​புத​மான பேட்​டிங் தொழில்நுட்பத்தால் சென்னை ரசிகர்​களை முதல் ஆட்​டத்​திலேயே கவர்ந்து இழுத்​துள்​ளார் சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி​யின் இளம் வீரர் ஆயுஷ் மாத்​ரே. மகா​ராஷ்டிர மாநிலம் விரார் பகு​தி​யைச் சேர்ந்த ஆயுஷ் மாத்​ரே, கடந்த 20-ம் தேதி மும்பை வான்​கடே மைதானத்​தில் சிஎஸ்கே அணிக்​காக முதல்​முறை​யாக களமிறங்கி 15 பந்​துகளில் 32 ரன்​களை விளாசி அணி நிர்​வாகத்​தின் நம்​பிக்​கையை வசப்​படுத்​தி​யுள்​ளார்.

முதல் போட்​டி​யிலேயே மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யின் பந்​து​வீச்சை விளாசித்​தள்ளி பயமறியா சிங்​கம் என்​பதை நிரூபித்​துள்​ளார் மாத்​ரே. மேலும், சிஎஸ்கே அணிக்​காக களமிறங்​கிய மிக இளம் வயது வீரர்​கள் பட்​டியலில் முதலிடத்​தை​யும் ஆயுஷ் மாத்ரே பிடித்​துள்​ளார். அவர் 17 வயது 278 நாட்​களான நிலை​யில் சிஎஸ்கே அணிக்​காக விளை​யாடி​னார். இதற்கு முன்​பு, அபிநவ் முகுந்த் 18 ஆண்டு 139 நாட்​களான நிலை​யில் களமிறங்​கிய இளம் சிஎஸ்கே வீரர் என்ற பெயரைப் பெற்​றிருந்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow