நடிகர் ஜெய்யைக் கலாய்த்த யோகிபாபு!

ஜெய்யிடம் ‘இன்னும் எப்படி இவ்வளவு இளைமையாகவே இருக்கிறீர்கள்?! எனக் கேட்டேன். அவர், ‘சிங்கிளாக இருப்பதால் இளமையாக இருக்கேன்’ என்றார்.

Feb 2, 2025 - 14:45
 0  2
நடிகர் ஜெய்யைக் கலாய்த்த யோகிபாபு!

யுவராஜ் பிலிம்ஸ் பி.யுவராஜ் தயாரிப்பில், பிரதாப் இயக்கத்தில், ஜெய் நாயகனாக நடித்துள்ள படம் ‘பேபி & பேபி’. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரக்யா நாயகியாக நடிக்க, இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபுவும் சத்யராஜும் நடித்துள்ளனர். அஜித் - விஜய் ஜோடியாக நடித்த கீர்த்தனா, இதில் சத்யராஜின் மனைவியாக நடித்துள்ளார். கலகலப்பான நகைச்சுவைக் குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர்.

படத்தின் இயக்குநர் பிரதாப் பேசும்போது: “ஒரு பெரிய குடும்பத்துக்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் காமெடி கலாட்டா தான் இந்தப் படம். இந்தக்கதையை எழுதி முடித்தவுடன் யோகிபாபு சாரிடம் தான் முதலில் போய் சொன்னேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. அவர்தான் இந்தப் படம் அடுத்துக் கட்டத்துக்கு நகரக் காரணம். அடுத்து சத்யராஜ் சாரிடம் சொன்னதும் அவரும் ஒப்புக்கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow