மால்களுக்கு முன்னோடி | ஆக.22 - சென்னை நாள்

சென்னை நகரத்தின் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் களும் பிளாசாக்களும்தான் தற்போது பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மால்களுக்கு எல்லாம் முன்னோடி.

Aug 21, 2025 - 14:35
 0  4
மால்களுக்கு முன்னோடி | ஆக.22 - சென்னை நாள்

சென்னை நகரத்தின் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களும் பிளாசாக்களும்தான் தற்போது பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மால்களுக்கு எல்லாம் முன்னோடி. தானியங்கி மின்படிக்கட்டுகள் (escalator) வரும் முன் கண்ணாடி வைத்த ‘லிஃப்ட்’டுகள் இந்தக் கட்டிடங்களுக்கு அழகு சேர்த்தன. இப்படிப் பழைய சென்னையை நினைவுபடுத்தும் சில இடங்கள்:

பிரின்ஸ் பிளாசா, எழும்பூர்: 1980களின் இறுதியில் கட்டப்பட்டு 1990களில் சென்னையின் பிரபல விற்பனை மையமாக இருந்தது பிரின்ஸ் பிளாசா. எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள இந்த பிளாசாவில் அழகு நிலையங்கள், செயற்கைப் பூக்களுக்கான அங்காடிகள், பயண முகமைகள், ஆடை, காலணி விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை இன்றும் செயல்படுகின்றன. ‘ஜெண்டில்மேன்’, ‘தீனா’வைப் போன்று கோலிவுட்டின் பிரபல சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட இடமும்கூட.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow