நிலையான வருமானத்தை கொடுத்த சமுதாயத் திறன் பள்ளி | வாழ்ந்து காட்டுவோம்!

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள பாப்பம்பாளையம் ஊராட்சியானது மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்று.

Feb 2, 2025 - 14:45
 0  4
நிலையான வருமானத்தை கொடுத்த சமுதாயத் திறன் பள்ளி | வாழ்ந்து காட்டுவோம்!

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள பாப்பம்பாளையம் ஊராட்சியானது மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்று. வாழ்வாதாரத்திற்காக இப்பகுதி மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். மேலும், இப்பகுதியில் நிலக்கடலை, தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது.

விவசாயத்திற்காகப் பூச்சிக்கொல்லிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதனால் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 20 பெண்களைக் கொண்டு இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கும் சமுதாயத் திறன் பள்ளிப் பயிற்சி வழங்கப்பட்டது. பஞ்சகவ்யம், மீன் அமிலம், மண்புழு உரம் தயாரித்தல் போன்ற பயிற்சிகளைப் பயிற்சியாளர் நல்லசிவம் வழங்கினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow