திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் திருப்பூர் ஜெயமுருகன் காலமானார்

திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருப்பூரில் அவரது உடல் இன்று (ஜன.18) தகனம் செய்யப்பட்டது.

Jan 18, 2025 - 14:00
 0  3
திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் திருப்பூர் ஜெயமுருகன் காலமானார்

திருப்பூர்: திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருப்பூரில் அவரது உடல் இன்று (ஜன.18) தகனம் செய்யப்பட்டது.

தயாரிப்பாளரான ஜெயமுருகன் மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, 1995-ம் ஆண்டு மன்சூர் அலிகானை கதாநாயகனாக வைத்து ‘சிந்துபாத்’ திரைப்படத்தை தயாரித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து, பாண்டியராஜன்,கனகா நடித்த ‘புருசன் எனக்கு அரசன்’ படத்தை தயாரித்தார். இந்த படமும் வெற்றி பெற ‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’, ‘தீ இவன்’ ஆகிய படங்களை தயாரித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow