அரிய வகை ஆள்காட்டி பறவை ஈரோட்டிற்கு வருகை

கிழக்காசிய பகுதிகளில் இருந்து தென் இந்தியாவிற்கு அரிதாக வலசை வரும் சாம்பல் தலை ஆள்காட்டி பறவை ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக எலத்தூர் குளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

Jan 18, 2025 - 14:05
 0  4
அரிய வகை ஆள்காட்டி பறவை ஈரோட்டிற்கு வருகை

கிழக்காசிய பகுதிகளிலிருந்து தென் இந்தியாவிற்கு அரிதாக வலசை வரும் சாம்பல் தலை ஆள்காட்டி பறவை, ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக எலத்தூர் குளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அளவில் 7 ஆள்காட்டி இனங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் பரவலாக நீர்நிலைகள் சார்ந்த இடங்களில் சிவப்பு மூக்கு ஆள்காட்டியையும், அங்கங்கே மஞ்சள் மூக்கு ஆள்காட்டியையும் காணலாம்.சாம்பல் தலை ஆள்காட்டிப் பறவையும் ஈரநிலப் பகுதிகளை சார்ந்து வாழும் இயல்புடையவை. இங்கு வாழும் புழுக்கள், பூச்சிகள், மெல்லுடலிகளை உண்டு இவை வாழ்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow