புரி ஜெகன்நாத் - விஜய் சேதுபதி பட ஷூட்டிங் தொடக்கம்

தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது

Jul 9, 2025 - 08:20
 0  4
புரி ஜெகன்நாத் - விஜய் சேதுபதி பட ஷூட்டிங் தொடக்கம்

தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது. இதில் தபு, சம்யுக்தா, ‘துனியா’ விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர். இதைப் புரி கனெக்ட்ஸ், ஜேபி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் நாராயண ராவ் கொண்ட்ரொல்லா இணைந்து தயாரிக்கின்றனர். நடிகை சார்மி கவுர் வழங்குகிறார்.

ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மாண்டமான செட் ஒன்றில், இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி, சம்யுக்தா தொடர்பான காதல் காட்சிகளை இப்போது படமாக்கி வருகின்றனர். இடைவெளியின்றி தொடர்ந்து இதன் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow