இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார் - திரையுலகம் அதிர்ச்சி

‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்.

Nov 16, 2024 - 08:05
 0  12
இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார் - திரையுலகம் அதிர்ச்சி

சென்னை: ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். அவரது மறைவு திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த 2017-ல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் தான் சுரேஷ் சங்கையா இயக்கிய முதல் படம். புதுமண தம்பதியர்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆடு ஒன்றை பலி கொடுக்க சென்று இருப்பார்கள். அங்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. விமர்சன ரீதியாக இந்தப் படம் கவனம் பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow