‘வதந்தி பரப்பி காலி பண்ண நினைத்தால் முடியாது’ - நடிகர் தனுஷ் ஆவேசம்

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

Jun 3, 2025 - 08:50
 0  3
‘வதந்தி பரப்பி காலி பண்ண நினைத்தால் முடியாது’ - நடிகர் தனுஷ் ஆவேசம்

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.

நடிகர் தனுஷ் பேசும்போது கூறியதாவது: இது கலிகாலம். வெறுப்பு, எதிர்மறை மற்றும் பொறாமை செழித்து வளரும் காலம்; நன்மையை விட தீமை மேலோங்கி வளர்கிறது. எனக்கு எதிராக எவ்வளவு வேண்டுமானாலும் வதந்திகள் பரப்பலாம். எதிர்மறையான விஷயங்களைக் கிளப்பலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow