ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ முதல் தோற்றம் வெளியீடு!
அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன், அடுத்து உதயநிதி நடித்த ‘கண்ணை நம்பாதே’ படத்தை இயக்கினார். இதையடுத்து அவர் இயக்கும் படம், ‘பிளாக்மெயில்’. இதில், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். அவர் ஜோடியாக தேஜு அஸ்வினி நடிக்கிறார்.

பிந்து மாதவி, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசை அமைக்கும் இந்தப் படத்தை ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் தெய்வக்கனி மற்றும் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார்கள். க்ரைம் த்ரில்லர் கதையான இதன் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. “தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படத்தை மே மாதம் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்றது படக்குழு.
What's Your Reaction?