திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தை தெப்பத் திருவிழா கோலாகலம்!
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைத் தெப்பத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. இன்று இரவில் மின்னொளி அலங்கார தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைத் தெப்பத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. இன்று இரவில் மின்னொளி அலங்கார தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைத் தெப்ப திருவிழாத் ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில், மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளினர். நேற்று முன்தினம் காலையில் தெப்ப முட்டுத்தள்ளுதல் நடந்தது. பின்னர் சிறிய வைரத் தேரோட்டம் நடந்தது.
What's Your Reaction?