‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ ட்ரெய்லர் எப்படி? - ஓர் புதிய உலகின் தொடக்கம்!

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்த படம் ‘ஜூராசிக் பார்க்’.

Feb 7, 2025 - 23:35
 0  3
‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ ட்ரெய்லர் எப்படி? - ஓர் புதிய உலகின் தொடக்கம்!

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்த படம் ‘ஜூராசிக் பார்க்’. டைனோசரஸ் இனத்தை திரையில் தத்ரூபமாக காட்டி, கிராபிக்ஸில் ஓர் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது இப்படம். இப்படத்தின் இரண்டாவது, மூன்றாவது பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. அதன் பிறகு ஸ்பீல்பெர்க் இப்படங்களிலிருந்து விலகிக் கொண்டார்.

பின்னர் பல ஆண்டுகளுக்கு ‘ஜுராசிக் வேர்ல்ட்’ என்ற பெயரில் மூன்று பாகங்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது ‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ என்ற படத்தை யுனிவர்சல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow