சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலை​யில் மண்டல மற்​றும் மகர​விளக்கு பூஜைக்கு சென்று திரும்​பும் பக்​தர்​கள் வசதிக்​காக, தமிழகத்​தில் சென்னை கோயம்​பேடு, கிளாம்​பாக்​கம் உள்பட பல்​வேறு இடங்​களில் இருந்து பம்​பைக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட​வுள்​ளன

Oct 29, 2025 - 01:40
 0  7
சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சபரிமலை​யில் மண்டல மற்​றும் மகர​விளக்கு பூஜைக்கு சென்று திரும்​பும் பக்​தர்​கள் வசதிக்​காக, தமிழகத்​தில் சென்னை கோயம்​பேடு, கிளாம்​பாக்​கம் உள்பட பல்​வேறு இடங்​களில் இருந்து பம்​பைக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட​வுள்​ளன.

இதுகுறித்​து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண்மை இயக்​குநர் இரா.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கேரள மாநிலத்​தில் மிக​வும் பிரசித்​திபெற்ற சபரிமலை​யில் உள்ள ஐயப்​பன் ஆலயத்​துக்கு ஒவ்​வொரு ஆண்​டும் நடை​பெறும் மண்டல பூஜை மற்​றும் மகர விளக்கு ஆகிய திரு​விழாக்​களின்​போது, தமிழகத்​திலிருந்து பக்​தர்​கள் சென்று வர ஏது​வாக சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow