தி ஹண்ட் - ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்... | ஓடிடி உலகம்
இலங்கைத் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்பட்டதன் நிகழ்காலச் சாட்சியமாகச் சர்வதேசக் கவ னத்தை ஈர்த்திருக்கிறது யாழ்ப்பாணத்தின் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகளால் நிறைந்துள்ள பெரும் புதைகுழி.

இலங்கைத் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்பட்டதன் நிகழ்காலச் சாட்சியமாகச் சர்வதேசக் கவ னத்தை ஈர்த்திருக்கிறது யாழ்ப்பாணத்தின் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகளால் நிறைந்துள்ள பெரும் புதைகுழி. அதேபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் படுகொலை நடந்து 34 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்திய மனம் அதை மறக்க விரும்பவில்லை என்பதை ‘தி ஹண்ட் - ராஜீவ் காந்தி கொலை வழக்கு’ என்கிற புதிய இணையத் தொடர் எடுத்துக்காட்டுகிறது.
ராஜீவ் கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவில் அங்கம் வகித்த சில மூத்த அதிகாரிகள் எழுதிய புத்தகங்கள் உள்பட, மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு இந்தியத் தலைவர் படுகொலை செய்யப்பட்டச் சதியின் வரைபடத்தை அலசி ஆராயும் பல நூல்கள், புத்தகச் சந்தையில் பல மொழிகளில் நன்கு விலைபோயின. அனிருத்ய மித்ரா என்கிற புலனாய்வுப் பத்திரிகையாளர் எழுதி வெளியான புத்தகத்தின் தரவுகளைத் தழுவி, 7 அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரை சோனி லிவ் தளத்துக்காகத் தேசிய விருதுபெற்ற இயக்குநர்களில் ஒருவரான நாகேஷ் குக்குனூரின் படைப்பாக்கக் குழு வினர் உருவாக்கியிருக்கிறார்கள்.
What's Your Reaction?