தி திரஷோல்ட் (ஆங்கிலம் - இந்தி) - அன்பும் அறனும் உடையும் தருணம் | திரைப் பார்வை
சிறார் சினிமா போலவே மூத்த குடிமக்கள் பற்றிய சினிமாவும் நம்மிடம் மிகக் குறைவு. ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘ஓகே கண்மணி’, ‘சில்லுக் கருப்பட்டி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற சில விதிவிலக்குகள் தவிர.

‘எல்லாருக்குமே உண்டு ஒரு முறிவுப் புள்ளி (breaking point)’. இது ‘12 ஆங்க்ரி மென்’ தொடங்கி ‘குருதிப்புனல்’ வரை பயன் படுத்தப்பட்ட புகழ்பெற்ற திரைப்பட வசனம். சில பத்தாண்டுகள் கடந்த திருமண பந்தத்துக்குப் பிறகு, தொடரவும் முடியாமல், வெளியேறும் காரணங்களும் புரியாமல் ஒரு பேரிளம் பெண்ணின் மனம் கோரும் ஒரு முறிவுப் புள்ளியை உளவியல்ரீதியாக ஆழமாக அலசும் சுயாதீனத் திரைப்படம் தான் ‘தி திரஷோல்ட்’. முதுமையின் தொடக்கத்தில் அடி வைத்திருக்கும் தம்பதி ராஜும் ரிங்குவும். இவர்களுடைய ஒரே மகனின் திருமணம் முடிகிறது.
ஒத்திசைவில்லாது கசந்த திருமண பந்தத்தில் உழலும் ரிங்கு தன் கணவனிடம் தான் வெளியேறுவது பற்றிக் கேட்கிறார். அவர் கேட்பது விவாகரத்து அல்ல, விடுதலை. அதன் பின் அந்த இரண்டு நாள்களுக்கு அத்தம்பதிக்குள் அவர்களின் கடந்த கால மணவாழ்க்கை குறித்த உரையாடல், மௌனம் என உளவியல் போராட்டம் நடக்கிறது. இறுதியில் அவர்களுடைய பல வருட பந்தம் என்னவாகிறது என்பதே கதை.
What's Your Reaction?