தலசயன பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்சவம்
மாமல்லபுரத்தில் அமைந்துள்ள தலசயன பெருமாள் கோயிலின் பார்வேட்டை உற்சவமாக, குழிப்பாந்தண்டலம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் இன்று தலசயன பெருமாள் எழுந்தருளினார்.

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் அமைந்துள்ள தலசயன பெருமாள் கோயிலின் பார்வேட்டை உற்சவமாக, குழிப்பாந்தண்டலம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் இன்று (ஜன.16) தலசயன பெருமாள் எழுந்தருளினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், காணும் பொங்கல் நாளில் பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கும்பாபிஷேகம் திருப்பணிகள் நடைபெற்றதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பார் வேட்டை உற்சவம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதால், மீண்டும் வழக்கம்போல் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்பேரில், இந்தாண்டு தலசயன பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்சவம் இன்று நடைபெற்றது.
What's Your Reaction?