ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்: திருப்பதி மாடவீதிகளில் 2 லட்சம் பக்தர்களுக்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் அமர்ந்து வாகன சேவைகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார்.

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் அமர்ந்து வாகன சேவைகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 2-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் இவ்விழாவுக்கு அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 9 நாட்களும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
What's Your Reaction?