தயார்நிலைக்குத் தயாராகுங்கள்
கட்டுப்பாடான மாணவப் பருவம் என்றால்கூட அதில் பலவித சுதந்திரம் உண்டு. அவற்றில் பெரும்பாலானவற்றைத் தொலைத்துவிடும் கட்டாயம் பணியில் சேரும்போது ஏற்படும்.

கட்டுப்பாடான மாணவப் பருவம் என்றால்கூட அதில் பலவித சுதந்திரம் உண்டு. அவற்றில் பெரும்பாலானவற்றைத் தொலைத்துவிடும் கட்டாயம் பணியில் சேரும்போது ஏற்படும். குறிப்பாக, சம வயதுத் தோழர்கள் இல்லாமல் சீனியர்களுடன் பணியாற்ற வேண்டிய சூழல் அமையலாம். சிரிப்பு, கொண்டாட்டம் போன்றவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உருவாகலாம். வரையறுக்கப்பட்ட பணி நேரம் முடிந்த பிறகும்கூடச் சிறிது நேரம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம்.
கல்லூரிப் பருவம் முடிந்து வேலைக்குச் செல்லும் பலரும் இந்தச் சோதனையான கட்டத்தைத் தாண்டித்தான் வந்திருப்பார்கள். புதிய சூழலை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வில்லை என்றால் இந்தக் காலக் கட்டம், அளவுக்கு அதிகமான மன இறுக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, மனதைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள், ஒரு கதையில் வரும் முதியவரைப் போல!
What's Your Reaction?