வர்த்தகத் துளிகள்: தங்கம் விற்பனை முதல் அமெரிக்க பங்குச் சந்தை வரை
இந்து காலண்டர் மாதமான கார்த்திகையின் 13-வது நாளில் அனுஷ்டிக்கப்படும் தந்தேரஸ் திருநாள், 5 நாள் தீபாவளி விழாவின் தொடக்கமாக கருதப்படுகிறது.

ரூ.60 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை: இந்து காலண்டர் மாதமான கார்த்திகையின் 13-வது நாளில் அனுஷ்டிக்கப்படும் தந்தேரஸ் திருநாள், 5 நாள் தீபாவளி விழாவின் தொடக்கமாக கருதப்படுகிறது. இது தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் மற்றும் செழிப்பை குறிக்கும் மங்களகரமான பொருட்கள் வாங்க மிகச் சிறந்த நாளாக கருதப்படுகிறது.
அதேநேரம், தங்கமும் வெள்ளியும் கடந்த ஓராண்டில் 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. ஆனாலும், இந்த ஆண்டு தந்தேரஸ் பண்டிகைக்கு மங்களகரமான பொருட்கள் விற்பனை ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது. இதில் தங்கம் விற்பனை மட்டும் ரூ.60 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்றும் இது கடந்த ஆண்டைவிட 25% அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. டெல்லி மக்கள் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்கத்தை அள்ளி உள்ளனர்.
What's Your Reaction?