தமிழகத்திலிருந்து உலக சாம்பியன் | சாதனை

செஸ் விளையாட்டுப் பின்னணி இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்து, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 20க்கும் அதிகமான நாடுகளுக்குப் பயணம் செய்து, 20க்கும் மேற்பட்ட சர்வதேச செஸ் தொடர்களில் விளையாடி முத்திரைப் பதித்துள்ளார் ஷர்வாணிகா. 

Oct 8, 2025 - 14:05
 0  2
தமிழகத்திலிருந்து உலக சாம்பியன் | சாதனை

கஜாகஸ்தான் நாட்டில் நடைபெற்ற 10 வயதுக் குட்பட்டோருக்கான கேடட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் ஏ.எஸ் ஷர்வாணிகா! இந்திய செஸ் வரலாற்றில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கானப் பிரிவில் பதக்கம் வென்ற மூன்றாவது வீராங்கனை இவர். இதற்கு முன்பு கொனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் நெசவுத் தொழில் செய்து வருகிறார் இவரின் அப்பா சரவணன். டியூஷன் வகுப்புகளை நடத்தி வந்தவர் அம்மா அன்பு ரோஜா. செஸ் விளையாட்டுப் பின்னணி இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்து, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 20க்கும் அதிகமான நாடுகளுக்குப் பயணம் செய்து, 20க்கும் மேற்பட்ட சர்வதேச செஸ் தொடர்களில் விளையாடி முத்திரைப் பதித்துள்ளார் ஷர்வாணிகா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow