“தடையில்லா சான்றிதழ் வழங்கியோருக்கு நன்றி!” - நயன்தாரா நெகிழ்ச்சி 

தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிகளுக்கு கேட்டதும் தடையில்லா சான்றிதழ் வழங்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். 

Nov 20, 2024 - 19:25
 0  3
“தடையில்லா சான்றிதழ் வழங்கியோருக்கு நன்றி!” - நயன்தாரா நெகிழ்ச்சி 

சென்னை: தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிகளுக்கு, கேட்டதும் தடையில்லா சான்றிதழ் வழங்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம்‌ வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள்‌ அடங்கிய எனது திரைப்‌ பயணத்தில்‌, நாம்‌ இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள்‌ மிகவும்‌ இன்றியமையாதது. அதனால்‌, அந்த படங்கள்‌ குறித்த நினைவுகளும்‌, ஆவணப்படத்தில்‌ இடம்பெற வேண்டும்‌ என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல்‌ தடையில்லா சான்றிதழ்‌ வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும்‌ நன்றியோடு நினைவில்‌ வைத்துக்‌ கொள்வேன்‌, என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow