மீண்டும் இணையும் பார்த்திபன் - வடிவேலு கூட்டணி!

சமீபத்தில் பார்த்திபன் - வடிவேலு இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

May 29, 2025 - 10:20
 0  5
மீண்டும் இணையும் பார்த்திபன் - வடிவேலு கூட்டணி!

சமீபத்தில் பார்த்திபன் - வடிவேலு இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். வடிவேலுவை சந்தித்தது குறித்து பார்த்திபன், “நகைச்சுவையில் மட்டுமல்ல நடிப்பிலும் ஈடில்லாதவர். சந்தித்தோம். இன்று. விரைவில் படம் வெளியாகும்!” என்று தனது எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் இணைந்து படமொன்றில் நடிக்கவுள்ளார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது.

பார்த்திபன் - வடிவேலு கூட்டணி காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம். இப்போதும் காமெடி தொலைக்காட்சிகளில் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் நீண்ட வருடங்கள் கழித்து இருவரும் நடிக்க இருப்பதால், இந்தக் கூட்டணிக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow