மீண்டும் தொடங்குகிறது இந்தியா - இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை

இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் திட்டமிட்டிருப்பதாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

Nov 20, 2024 - 19:35
 0  4
மீண்டும் தொடங்குகிறது இந்தியா - இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை

ரியோ டி ஜெனிரோ: இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் திட்டமிட்டிருப்பதாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் ஊடாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, புத்தாண்டில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான இங்கிலாந்தின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow