ரஷ்யாவின் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை: உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்

ரஷ்ய - உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்துக்கு மத்தியில், ரஷ்யா குறிப்பிடத்தகுந்த வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையால், உக்ரைனின்  கீவ்  நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Nov 20, 2024 - 18:50
 0  3
ரஷ்யாவின் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை: உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்

கீவ்: ரஷ்ய - உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்துக்கு மத்தியில், ரஷ்யா குறிப்பிடத்தகுந்த வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையால், உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் தூதரக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மிகுந்த எச்சரிக்கையுடன் தூதரகம் மூடப்படுகிறது. தூதரக ஊழியர்கள் தங்குமிடமித்தில் இருக்க அறிவுத்தப்படுகிறார்கள். வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை கேட்டால் கீவ் நகரில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow