தங்கம் எங்கிருந்து கிடைக்கிறது? | டிங்குவிடம் கேளுங்கள்

பூமியின் மேலடுக்கின் அடியில் பாறைகளுக்கு இடையே இருக்கிறது தங்கம். அந்தத் தங்கத்தைச் சுரங்கம் தோண்டி, வெட்டி எடுக்கிறார்கள். கடல் போன்ற நீர்நிலைகளிலும் தங்கத்துகள்கள் கிடைக்கின்றன.

Sep 17, 2025 - 12:55
 0  5
தங்கம் எங்கிருந்து கிடைக்கிறது? | டிங்குவிடம் கேளுங்கள்

தங்கம் எங்கிருந்து கிடைக்கிறது டிங்கு? - ஏ. ஆராதனா, 3-ம் வகுப்பு, இந்தியன் பப்ளிக் பள்ளி, சேலம்.

பூமியின் மேலடுக்கின் அடியில் பாறைகளுக்கு இடையே இருக்கிறது தங்கம். அந்தத் தங்கத்தைச் சுரங்கம் தோண்டி, வெட்டி எடுக்கிறார்கள். கடல் போன்ற நீர்நிலைகளிலும் தங்கத்துகள்கள் கிடைக்கின்றன. சரி, பூமிக்குத் தங்கம் எங்கிருந்து வந்தது? நட்சத்திரங்களில் வெப்பம் ஒருகட்டத்தில் அளவுக்கு அதிகமாக உயரும்போது ஹைட்ரஜனும் ஹீலியமும் ஒன்றோடு மற்றொன்று இணைந்து, அதைவிட எடை அதிகமான ஹீலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், இரும்பு போன்ற அணுக்களை உற்பத்தி செய்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow