சுதந்திர இந்தியா 100 வயதை எட்டும்வரை மோடியின் சேவை தொடர வேண்டும்: முகேஷ் அம்பானி
சுதந்திர இந்தியா 100 ஆவது வயதை எட்டும் வரை நரேந்திர மோடி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துவதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மும்பை: சுதந்திர இந்தியா 100-வது வயதை எட்டும் வரை நரேந்திர மோடி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துவதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வாழ்த்துச் செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று 145 கோடி இந்தியர்களின் கொண்டாட்ட நாள். நமது மிகவும் மரியாதைக்குரிய அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாள். இந்தியாவின் ஒட்டுமொத்த வணிக சமூகத்தின் சார்பாகவும், ரிலையன்ஸ் குடும்பத்தின் சார்பாகவும், அம்பானி குடும்பத்தின் சார்பாகவும் பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
What's Your Reaction?