சுழல் 2 - மீண்டும் அதே பிரம்மாண்டம் | ஓடிடி திரை அலசல்

தற்போது வெளியாகி இருக்கும் ‘சுழல் - தி வோர்டெக்ஸ் - சீசன் 2’, காளிப்பட்டினம் என்கிற கற்பனையான கிராமத்தைக் களமாகக் கொண்டிருக்கிறது.

Feb 28, 2025 - 09:45
 0  4
சுழல் 2 - மீண்டும் அதே பிரம்மாண்டம் | ஓடிடி திரை அலசல்

கடந்த 2023இல் அமேசான் தளத்தில் வெளியான ‘சுழல்’, முக்கிய சமூகப் பிரச்சினையைக் கதையாகத் துணிந்து பேசியது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத திரைக்கதை, அட்டகாசமான நடிகர்கள் தேர்வு, அபாரமான கலை இயக்கம், சாம்.சி.எஸ்ஸின் ஊக்கமூட்டும் இசை என ‘வெப் சீரீஸ்’ ரசிகர் களுக்குப் பெரும் தீனியாக அமைந்தது. அத்துடன் தமிழில் பிரம்மாண்டமானதோர் இணையத் தொடர் இல்லையே என்கிற குறையையும் துடைத் தெறிந்தது.

தற்போது வெளியாகி இருக்கும் ‘சுழல் - தி வோர்டெக்ஸ் - சீசன் 2’, காளிப்பட்டினம் என்கிற கற்பனையான கிராமத்தைக் களமாகக் கொண்டிருக்கிறது. அதேபோல் முதல் சீசனில் முக்கியக் கதாபாத்திரங்களாக வந்தவர்களில் காவல் உதவி ஆய்வாளர் சர்க்கரையும் (கதிர்) முதல் பாகத்தின் கதைக் களமான சாம்பலூரின் யூனியன் லீடர் சண்முகத்தின் மூத்த மகள் நந்தினியும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) இதில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர். தன் தங்கை நிலா காணாமல் போன மர்மத்தின் பின்னணியை அறியமுடியாத நிலையில், முதல் பாகத்தின் முடிவில் நந்தினி சிறைக்குச் செல்வதோடு தொடர் முடிந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow