பண்ணைப் பயிற்சியால் பெருகிய மகசூல் | வாழ்ந்து காட்டுவோம்!

இராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணி வட்டாரத்திலுள்ள பனைக்குளம் ஊராட்சியில் நாங்கள் வசித்துவருகிறோம். எங்கள் ஊராட்சியில் பெரும்பாலான மக்கள் விவசாயத் தொழிலை மட்டுமே

Jan 26, 2025 - 13:35
 0  4
பண்ணைப் பயிற்சியால் பெருகிய மகசூல் | வாழ்ந்து காட்டுவோம்!

இராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணி வட்டாரத்திலுள்ள பனைக்குளம் ஊராட்சியில் நாங்கள் வசித்துவருகிறோம். எங்கள் ஊராட்சியில் பெரும்பாலான மக்கள் விவசாயத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கிறோம். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் நவீன மயமாக்கலின் காரணமாக விவசாயத்தின் முழுப் பலனையும் அடைவதில் நாங்கள் மிகவும் பின்னடைவைச் சந்தித்துவருகிறோம். எங்களது ஊராட்சியில் விவசாயிகளை ஒன்றிணைத்து நாங்கள் ஒரு விவசாய உற்பத்தியாளர் குழுவை உருவாக்கியுள்ளோம்.

எங்கள் பகுதியின் மண்வளம் மிளகாய் பயிருக்கு ஏற்றதாக உள்ளதால் பல விவசாயிகள் இதைப் பயிரிடுகின்றனர். எங்களுக்குப் பண்ணைப் பயிற்சி வழங்குவதற்காக TNRTP திட்டத்தின் மூலம் எங்கள் ஊராட்சியில் உள்ள விவசாய உற்பத்தியாளர் குழுவில் இருந்து 30 பேர் தேர்வு செய்யப்பட்டு சமுதாயப் பண்ணைப் பள்ளி (CFS) உருவாக்கப்பட்டது. விவசாயம் சார்ந்து பல பயிற்சிகளை பெற்றிருந்த ரோஸ்லின், பண்ணைப் பள்ளி பயிற்றுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எவ்வாறு மிளகாய் பயிரிடுவது, மண் வளம், பயிர் ஊக்கிகளைத் தேர்ந்தெடுத்தல், நவீன விவசாயக் கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற அனைத்து விதமான பயிற்சிகளும் சமுதாயப் பண்ணைப் பள்ளியில் எங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow