சிறந்த ‘தலைவர்’ யார்? - ரத்தன் டாட்டா உதிர்த்த 10 உத்வேக மேற்கோள்கள்
உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா நேற்று (புதன்கிழமை) இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு இரங்கல் குவிந்து வரும் நிலையில் அவருடைய உத்வேக வார்த்தைகள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வயது மூப்பு - உடல்நலக்குறைவு காரணமாக, இந்தியாவின் மகத்தான தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 வயதில் மறைந்தார். இந்திய தொழில் துறையில் அவரது பங்களிப்பு மிகப் பெரியது. குறிப்பாக, சமூக நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அவரது தொழில் அணுகுமுறை என்றென்றும் முன்னுதாரணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய மதிப்பு மிக்கவர் உதிர்த்தவற்றில் 10 முக்கிய மேற்கோள்கள் இங்கே...
- “அதிகாரமும், செல்வமும் எனது முக்கியப் பங்குகளாக இருந்ததே இல்லை!”
- “நீங்கள் வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நடப்பீர்; ஆனால் நீண்ட தூரம் நடக்க விரும்பினால் இணைந்து நடக்க வேண்டும்.”
- “உங்கள் மீது வீசப்பட்ட கற்களைக் கொண்டு ஒரு நினைவுச் சின்னத்தை கட்டி எழுப்புங்கள்.”
- “வெற்றியாளர்கள் என்னை ஈர்ப்பார்கள். ஆனால், அவர்கள் வெற்றிக்கான பாதை இரக்கமற்றதாக இருந்தால் நான் அவர்களைக் கண்டுகொள்வதில்லை.”
“வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் முக்கியம். அவைதான் நம்மை முன்னே நகர்த்திச் செல்லும். இசிஜி-யில் கோடுகள் நேராக இருந்தால் நாம் உயிருடன் இல்லை என்று அர்த்தம்.”
What's Your Reaction?